Thursday, October 10, 2013

நடுநிலைவாதி நான்


நான் யார் ?

குறைகளையும் நிறைகளையும்
பிறழாமல் சொல்பவன்


ஆம்
பிடித்தவரின் நிறைகளையும்
பிடிக்காதவரின் குறைகளையும்
தவறாமல் சொல்லும்
நடுநிலைவாதி நான்

புத்தனின் படத்தில்
அன்பை போதிக்கவும்
பாரதியின் படத்தில்
ரெளத்திரம் பழகவும்
பிண்ணூட்டம் இடும்
நடுநிலைவாதி நான்

தமிழ் இலக்கணத்தை
குழிதோண்டிப் புதைத்து
சினிமா இலக்கணம் பற்றி
பக்கம் பக்கமாய்
விமர்சனம் எழுதும்
நடுநிலைவாதி நான்

பிற சமூகத்திற்க்கு
விளையும் இன்னல்களை
பொறுக்க மாட்டேன்
பிற சமூகத்தில்
உள்ள தவறுகளை
பேச மறந்த
நடுநிலைவாதி நான்

நான் யார் ??

#நடுநிலைவாதி

No comments:

Post a Comment