கண்ணீர்அஞ்சலி
கடந்த ஒரு வாரமாய்
தெருமுனையில்
காலை மதியம்
மாலை இரவு
இருபத்தி நான்கு மணிநேரமும்
சதா அழுதுகொண்டிருக்கிறது
அந்தக் கண்கள்
வயிறு இருக்கும் கண்கள் எல்லாம்
வற்றிப் போய்விட்டது
சுவற்றிலிருப்பதால் தான்
இன்னும் சிந்திக் கொண்டிருக்கிறதோ
அந்தக் காகிதக் கண்கள்
No comments:
Post a Comment