Tuesday, September 17, 2013

பெயர் வைக்கல



அது ஒரு வட்டாட்சியர் அலுவலகம். வெகுநேரம் கையில் குழந்தையோடு காத்துக் கொண்டிருந்த அந்த கணவனும் மனைவியும் கிராமத்துவாசிகள் என்பது அவர்களின் உடையிலல்ல, அவர்களின் முகத்தில் தெரிந்தது. நகரவாசிகளுக்கு அந்த அப்பாவித்தனம் உரித்தானதல்ல. அல்லது நகரத்திற்க்கு உதவாது என்று உரித்தெடுத்திருக்கலாம். முறையே 40 வயது 30 வயது மதிக்கத்தக்க அந்த கணவனும் மனைவியும் உதவியாளர் அழைத்த குரலுக்கு சிறுபிள்ளை போல் ஓடிச்சென்றனர். உதவியாளர் இவர்களை அதிகாரியிடம் ஒப்புவித்துவிட்டுச் சென்றார்

சில கோப்புகளை சரிபார்த்துக் கொண்டிருந்த அந்த அதிகாரி நிமிர்ந்து இவர்களை பார்த்து “என்னையா... என்ன வேணும் ?
என்றார்

கணவன் “ஐயா.. எங்களுக்கு ரொம்ப வருஷங்கழிச்சு கும்பிடாத சாமியெல்லாம் கும்பிட்டு பிள்ளை பிறந்திருக்குங்க்கையா" என்று பெருமிதத்துடன் சொன்னவர்... தொடர்ந்தார்
"என் பிள்ளைக்கு ஏதோ பிறப்பு சான்றிதழாங்கையா... ஆஸ்பத்திரில இங்க வந்து வாங்கிக்க சொன்னாங்கையா
என்றார்


“எந்த ஆஸ்பத்திரியா ?

“****** ஆஸ்பத்திரிங்கையா “

ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து கவனிக்கத்தொடங்கிய அதிகாரி தொடர்ந்தார்
“உன் பேர் என்னையா ?

“கும்பிடுறேன் சாமிங்கையா”

“கும்பிடுறேன் சாமியா ?! என்ன பேருயா இதுஎன்றவர் தொடர்ந்தார்
“உன் பொண்டாட்டி பேரென்னயா ?

“போதும் பொண்ணுங்கையா

“போதும் பொண்ணா ?! எந்த ஊருயா நீங்கெல்லாம். உங்களுக்கு எப்படியா இப்படியெல்லாம் பேர் வைக்கத்தோனுது ? என்று ஏழனத்துடனும் எரிச்சலுடனும் கூறியபடியே கோப்புகளில் இவர்களுடைய பெயர்களைத் தேடி அந்த குழந்தைக்கான சான்றிதழை கையிலெடுத்தவர்.. மீண்டும் தொடர்ந்தார்
“பிள்ளைக்கு என்னையா பேர் ? என்றார்

“வைக்கலங்கையா

திகைத்துப் பார்த்த அதிகாரி... ‘என்னடா பேரு இது. கும்பிடுறேன் சாமி, போதும் பொண்ணு, வைக்கலைன்னு...... அது சரி அங்கவை சங்கவைனு வைக்கும் போது வைக்கலன்னு ஒரு பேரு இருக்கக் கூடாதா என்று எண்ணிய படியே அந்த சான்றிதழ் தயாரானது


 “பெயர் : வைக்கல
 

பி.கு : ஆத்திரத்தையும்..****த்தையும்... அடக்க கூடாது. கொட்டித் தீர்த்திருங்க கமெண்ட் பாக்ஸ்ல. கெட்டவார்தைகளுக்கு மட்டும் '***' பயன்படுத்தும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
                      

No comments:

Post a Comment