வீட்டில சும்மா உட்கார்ந்திருக்க போரடிக்குதுன்னு நண்பனுக்கு போன போட்டு மச்சி என்ன பண்ணலாம் எதாவது ஐடியா கொடுன்னு சொன்னேன். அவன் மாமா வ.வா.ச படம் வந்திருக்கு போய் பாருன்னு சொன்னான்.... சரி வீட்டில கேமேன்னு (PS3) தான உட்கார்ந்திருக்கோம். போய் படத்தை பார்த்திடு வரலாம்னு கிளம்பிட்டேன்
சும்மா சொல்லக் கூடாது நம்ம ஊருல இப்போ காமெடி படத்துக்கு தான் அதிகமா கூட்டம் வருது. சரி நம்மகிட்ட கதைக்குத் தான பஞ்சம்.. காமெடியாவது கோடிக்கணக்குல இருக்கேன்னு சந்தோசப் பட்டுக்க வேண்டியதுதான். அதுக்கும் பஞ்சம் வந்திட்டா அப்புறம் வெறும் விஜய் படம் மட்டும் தான் வரும்..ஐ மீன் காபி பேஸ்ட் படம். அந்த வம்பு நமக்கெதுக்கு அதத்தான் மொத்த குத்தகைக்கு எடுத்துக்கிட்டு நிறைய பேர் இருக்காங்களே
சரி இப்போ சங்கத்துக்கு (கதைக்கு) வருவோம்.. இல்லைன்னா சங்கத்த கலைச்சிடுவாங்க. கதை என்னன்னா....
கதையா ? ஆமா படத்தில சிவகா, சூரி, சத்தியராஜ் அப்புறம் அந்த தேவதை (ஹிஹி) இருந்தாங்க பார்த்தேன். கதைய பார்க்கலையே!!! தூங்கிட்டேனோ !? சரி விடுங்க பெரிய ‘தலைவர்’கள் படத்திலயே கதை இருக்கிறதில்லை காமெடி பட்த்தில கதைய தேடினா என்ன அர்த்தம்.. தப்பு. சும்மா இருக்க ரெண்டு பேர் சங்கம் வச்சாங்க.. சங்கம் வச்சு சும்மா இருக்காம காதல் வளர்த்தாங்க... காதல் வச்சு தாடி வச்சாங்களா தாண்டி குதிச்சாங்களா ? இதுதான் கதை. ஆனால் சும்மா இருக்க ஆளு எதுக்கு MA.,MPhil., படிச்சார்னு தெரியலை. காமெடிக்கு கதையும் லாஜிக்கும் முக்கியமில்லை.. ஆனால் கேரக்டரும் வசனமும் முக்கியம். SMS, பாஸ் (எ) பாஸ்கரன், OKOK புகழ் ராஜேஷ் வசனம்னு என்னால எந்த இடத்திலயும் உணரமுடியலை. எங்கயோ இடிக்குது. எதிர்பார்த்தது ஏமாற்றம்தான். ஒருவேளை சந்தானத்தோட தான் அந்த மேஜிக் நடக்கும்னு நினைக்கிறேன். சில வசனங்கள் ரொம்பவே பழசா இருந்திச்சு.
நம்ம சிவகார்த்திகேயனுக்கு என்னாச்சுயா ? இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமேன்னு தோனுச்சு ஓபனிங் சீனுக்கு. சிவகார்திகேயன்னு முழுசா அடிக்க ரொம்ப சோம்பேறித்தனமா இருக்கு... சிவானு சொல்லுவோமா ? அட அப்புறம் 'தமிழ் படம்' சிவா சண்டைக்கு வருவாரு. அதனால இங்கிருந்து சிவகார்திகேயனை அன்போடு சிவகா என்று அழைப்போமா ? அட இந்த பக்கத்தில மட்டுத்தாங்க... மற்றபடி உங்களுக்கு பிடிச்ச மாதிரி கூப்பிட்டுக்கோங்க. யார் கேட்கப்போறா ? சிவகா உடல் மொழில நல்லா தேறிருக்கார்... ஆனால் வாய் அப்படியேதான் இருக்கு. கதாபாத்திரம் கூட அதேமாதிரி தான் இருக்கு. சரி வளரும் நடிகர்.. வேறு வழியில்லை. ஆனால் கொஞ்சம் மாடுலேசன மாத்துங்க பாஸ். மெரினா.. மனங்கொத்திப் பறவை.. எதிர்நீச்சல் படமும் கூடயே டிராவல் ஆகிறா மாதிரி இருக்கு. அப்பாவ ஒரண்ட இழுக்கிற சீன்ல கே.பி.கி.ரங்கா சாயல் அப்படியே இருக்கு. டீச்சரா பார்த்து சைட் அடிக்கிறதுக்கு எதாவது காரணம் இருக்கா ? சிவகாக்கு விஜய் டீவில கிடைச்ச மாதிரி ஒரு அருமையான இயக்குனர் கிடைச்சா அருமையா இருக்கும்னு எனக்கு எண்ணம் உண்டு. அந்தாள்கிட்ட இருக்க திறமைய முழுதும் வெளிப்டுத்துற வாய்ப்பு சீக்கிரம் வரணும்னு ஆசைபடுறேன்.
இப்போ சூரி.. சான்சே இல்லை. சிங்கம் சிங்கம்னு சூரி ஓடி வரும்போது தியேட்டரே சும்மா அதிருச்சுல. மனுசன் நல்லாவே வளர்ந்துகிட்டு இருக்காருயா. பிச்சு பெடலெடுக்கிறார். இப்படி எழுதுறதால சூரி காசு கொடுத்து எழுதவச்சிட்டார்னு பொரளிய கிளப்பிடாதீங்கயா. சத்தியமா நல்லா இருந்திச்சு. ஒவ்வொரு கவுன்டர் டயலாக்குக்கும் முகபாவனையும் டயமிங்கும் நச்சு (இதென்ன மேடை நாடகமா ? டைமிங் தப்பாகிறதுக்கு.. தப்பானா இன்னொரு டேக் போவாங்கல? சரி விடுங்க... எழுதுனது எழுதுனதாவே இருக்கட்டும். முன்வச்ச காலமட்டுமில்லை.. முன்னடிச்ச வார்த்தைய கூட திருத்தி வைக்கிற பழக்கம் எங்களுக்கு கிடையாது). சூரியோட நடிப்பு நாளுக்கு நாள் வளருது. பரோட்டா சூரி.. செயலாளர் சூரியா வளர்ந்து கலக்கியிருக்கார். உடல் மொழியும் உடலும் நல்லாவே மெருகேறியிருக்கு.
சத்தியராஜ் பற்றி சொல்லத்தேவயில்லை... அவர் இயக்குனர் செய்யச் சொல்றத செஞ்சிகிட்டு போற ஆள். நான் அப்படி பண்ணுவேன் இப்படி பண்ணுவேன்னு பில்டப் கொடுக்கிறதில்லை. மண்ண தட்டிவிடுறதும் இல்லை.
தமிழ்தேசத்திற்க்கு புதுவரவு அந்த பொண்ணு. படத்தில ஒரு மிகப்பெரிய ப்ளஸ் அந்த பொண்ணுதான். நல்ல அழகு. சரியான கையில இருந்தால்.. ஐ மீன் கைடன்ஸில் இருந்தா பொழைச்சிக்கும். எதாவது குரங்கு கையில போய் நாரிடப்போதோன்னு ஒரு சராசரி ரசிகனா வருத்தப்படுறேன்.
பாட்டுல எனக்கு பிடிச்சது ஊதா கலரு ரிப்பன் மட்டும் தான்.
படம் ஆராய்சியாளர்களுக்கு கடுப்பாகும்.. சராசரியாளுகளுக்கு சிரிப்பாகும்.
சினிமா ஆராய்ச்சியாளர்களே.. தியேட்டர் பக்கம் கூட போகாதீங்க. என்ன மாதிரி ஆட்கள் போறடிச்சா போகலாம். மற்றவர்கள் சும்மா இருந்தாலே போய்ட்டு வரலாம். பொழுதுபோக்குக்கு கியாரண்டி உண்டு.
****
naduvila nee podra mokka comedy thaanga mudila... u also should select suitable words to express ur thought... more of like interacting with the reader... for ex. instead of "i mean copy past padam" you can put "athanga... copy past padam"
ReplyDeleteThanks and I appreciate ur feedback
Delete