Friday, December 13, 2013

கண்ணீர்அஞ்சலி

கடந்த ஒரு வாரமாய்
தெருமுனையில்
காலை மதியம்
மாலை இரவு
இருபத்தி நான்கு மணிநேரமும்
சதா அழுதுகொண்டிருக்கிறது
அந்தக் கண்கள்

வயிறு இருக்கும் கண்கள் எல்லாம்
வற்றிப் போய்விட்டது
சுவற்றிலிருப்பதால் தான்
இன்னும் சிந்திக் கொண்டிருக்கிறதோ
அந்தக் காகிதக் கண்கள்


Thursday, October 10, 2013

நடுநிலைவாதி நான்


நான் யார் ?

குறைகளையும் நிறைகளையும்
பிறழாமல் சொல்பவன்

Wednesday, October 2, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


 
பல வருடங்கள் கழித்து தமிழில் ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். மிஷ்க்கின் தன் தகுதியை மீண்டும் உயர்த்திக் கொண்டார். முகமூடியில் படிந்த கரையை முகமூடியோடு தூக்கி எரிந்துவிட்டு ஓநாயாக வேட்டையாடியிருக்கிறார் இப்பொழுது.

சிலருக்கு ட்ரைலரையும் திரைப்படத்தின் பெயரையும் வைத்து கதையை யூகிக்கும் திறன் உண்டு. அப்பேர்ப்பட்டவர்களுக்கும் சவாலான கதை இது. திரைப்படத்தின் பெயர் கதையுடன் எவ்வாறான வடிவங்களிலும் கோனங்களிலும் உறவாடுகிறது என்பதை படம் பார்த்து உணர்ந்துகொள்ளுங்கள்.

மிஷ்க்கினுக்கென்று ஒரு பாணி உண்டு. அது அவர் படங்களை தொடர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்குத் தெரியும். உதாரணமாக,

Saturday, September 21, 2013

பேதமை - என் முதல் ஹைக்கூ

புழுதி கிளம்பிக் காற்றில் பறக்க
மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டான்
புகைப் பிடிக்கும் இளைஞன்

Wednesday, September 18, 2013

போதை !!!

நான் அறியாமல்
என்னை நீ
வேட்டையாட முடியாது

உன்னிடம் பலியாக
நான்  ஒன்றும்
பலவீனமானவனும் கிடையாது

Tuesday, September 17, 2013

பெயர் வைக்கல



அது ஒரு வட்டாட்சியர் அலுவலகம். வெகுநேரம் கையில் குழந்தையோடு காத்துக் கொண்டிருந்த அந்த கணவனும் மனைவியும் கிராமத்துவாசிகள் என்பது அவர்களின் உடையிலல்ல, அவர்களின் முகத்தில் தெரிந்தது. நகரவாசிகளுக்கு அந்த அப்பாவித்தனம் உரித்தானதல்ல. அல்லது நகரத்திற்க்கு உதவாது என்று உரித்தெடுத்திருக்கலாம். முறையே 40 வயது 30 வயது மதிக்கத்தக்க அந்த கணவனும் மனைவியும் உதவியாளர் அழைத்த குரலுக்கு சிறுபிள்ளை போல் ஓடிச்சென்றனர். உதவியாளர் இவர்களை அதிகாரியிடம் ஒப்புவித்துவிட்டுச் சென்றார்

சில கோப்புகளை சரிபார்த்துக் கொண்டிருந்த அந்த அதிகாரி நிமிர்ந்து இவர்களை பார்த்து “என்னையா... என்ன வேணும் ?
என்றார்

கணவன் “ஐயா.. எங்களுக்கு ரொம்ப வருஷங்கழிச்சு கும்பிடாத சாமியெல்லாம் கும்பிட்டு பிள்ளை பிறந்திருக்குங்க்கையா" என்று பெருமிதத்துடன் சொன்னவர்... தொடர்ந்தார்
"என் பிள்ளைக்கு ஏதோ பிறப்பு சான்றிதழாங்கையா... ஆஸ்பத்திரில இங்க வந்து வாங்கிக்க சொன்னாங்கையா
என்றார்

Wednesday, September 11, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்



வீட்டில சும்மா உட்கார்ந்திருக்க போரடிக்குதுன்னு நண்பனுக்கு போன போட்டு மச்சி என்ன பண்ணலாம் எதாவது ஐடியா கொடுன்னு சொன்னேன். அவன் மாமா வ.வா.ச படம் வந்திருக்கு போய் பாருன்னு சொன்னான்.... சரி வீட்டில கேமேன்னு (PS3) தான உட்கார்ந்திருக்கோம். போய் படத்தை பார்த்திடு வரலாம்னு கிளம்பிட்டேன்

சும்மா சொல்லக் கூடாது நம்ம ஊருல இப்போ காமெடி படத்துக்கு தான் அதிகமா கூட்டம் வருது. சரி நம்மகிட்ட கதைக்குத் தான பஞ்சம்.. காமெடியாவது கோடிக்கணக்குல இருக்கேன்னு சந்தோசப் பட்டுக்க வேண்டியதுதான். அதுக்கும் பஞ்சம் வந்திட்டா அப்புறம் வெறும் விஜய் படம் மட்டும் தான் வரும்..ஐ மீன் காபி பேஸ்ட் படம். அந்த வம்பு நமக்கெதுக்கு அதத்தான் மொத்த குத்தகைக்கு எடுத்துக்கிட்டு நிறைய பேர் இருக்காங்களே 

சரி இப்போ சங்கத்துக்கு (கதைக்கு) வருவோம்.. இல்லைன்னா சங்கத்த கலைச்சிடுவாங்க. கதை என்னன்னா....